கிஷோர், சில படங்களில் வில்லனாக நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: அது உண்மைதான். தவறான குணங்களை கொண்ட கேரக்டர் ரோல்களில் நடிக்க தயக்கம் இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று கொடூரமான வில்லனாக நடிக்கத் தயக்கம். அப்படி வந்த வாய்ப்புகளைத்தான் மறுத்தேன். காரணம் நான் கன்னடத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தமிழ்ப் படங்கள் ஓடுகிறது. அதை கன்னடத்து மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். நான் தமிழ் படத்தில் கொடூர வில்லனாக நடித்தால் கன்னடத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். அதனால் தவிர்க்கிறேன்.