
படப்பிடிப்பின் போது சந்தித்து தங்களின் பிஞ்சு பருவ நினைவுகளிலிருந்து நிறைய பேசினார்களாம். நாங்க படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள், அதில் நடிக்கும் இளம் நடிக பட்டாளம் என எல்லாவற்றையும் கமல் உச்சி மோந்து மெச்சினாராம். கமலின் நண்பரும் இயக்குனருமான சந்தானபாரதியின் மகன், இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும், படத்தில் நடிக்கின்றவர்களை பற்றி ஆர்வமாக விசாரித்தாராம். நாங்க பட நடிக பட்டாளத்துக்கு உண்மையில் சினிமா மேல் உள்ள ஆர்வத்தையும் கலை தாகத்தையும் கமல் அறிந்தாராம். உலகநாயகன், தவிர்க்க முடியாத சில காரணங்களால் "நாங்க" படத்தின் ஓடியோ வெளியீட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக கூறுகிறார்கள். ஜூன் மாதம் முதல் வாரம் "நாங்க" படத்தை வெளியிடப்போகிறார்களாம். படத்தை இயக்கிய டைரக்டர் செல்வா, "நாங்க" படத்தை ரசிக்க கமல் சார் ஆர்வமாக உள்ளார். அவருக்கென சிறப்புக் காட்சிகள் போட உள்ளோம். படம் வெளியான பிறகு, நாங்க படத்தின் விளம்பரக்காரை எடுத்துக்கொண்டு சுற்ற போகிறோம் என்கிறார். |