Tuesday, May 17, 2011
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்தார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்கு கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில் நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து தலைவர் பதவியை வகித்து வந்தார். தி.மு.க.வில் இணைந்த அவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். சொந்த பணி காரணமாகவும், தொடர் படப்பிடிப்பு இருப்பதாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.