ஹாலிவுட், பாலிவுட் படங்களைப் போல தமிழ், மலையாள சினிமாக்களிலும் உதட்டுக்கடி முத்தக்காட்சிகள் பிரபலமாகி வருகின்றன. ஒருசில நடிகைகள் முதல் படத்திலேயே எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ... அவ்வளவையும் காட்டி விடுகிறார்கள். எந்தமாதிரியான காட்சிகளில் நடிக்க வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று கூறி வாய்ப்பு கேட்க வருகிறார்கள். முத்தக்காட்சியைப் பொறுத்தவரை ஒருசிலரே துணிச்சலுடன் நடிக்க சம்மதிக்கிறார்கள். இப்போது அந்த வரிசையில் ரம்யா நம்பீசனும் இணைந்திருக்கிறார்.
அவர் புதிதாக நடித்து வரும் சாப்பாகுரிசு என்ற மலையாள படத்தில், கதாநாயகன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்து இருக்கிறார். அந்த காட்சியில் ரம்யா நம்பீசனுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த நாயகன் பெயர் சஹத். இவர் ஏற்கனவே சில மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். இவரும், ரம்யா நம்பீசனும் நடித்த முத்தக்காட்சி, படத்தில் 2 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த முத்தக்காட்சி, சாப்பாகுரிசு படத்தின் டிரைலரிலும் இடம்பெற்றுள்ளது. மலையாள தொலைக்காட்சிகளை இப்போது முற்றிலும் ஆக்கிரமித்து இளசுகளை சூடேற்றிக் கொண்டிருக்கிறது ரம்யா நம்பீசனின் முத்தக்காட்சி.