Thursday, June 16, 2011
அதனால்தானோ என்னவோ... அவன் இவனுக்கு கடந்த ஒரு வாரகாலமாகவே பத்திரிகை, தொலைக்காட்சிகளில் நிறைய பப்ளிசிட்டி கொடுத்து வருகிறார்கள். விதவிதமான டிரைலர்கள் ஒளிபரப்பாவதால் எதிர்பார்த்ததுபோலவே அவன் இவனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது டிக்கெட் புக்கிங் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சென்னையில் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த முதல் 2 மணி நேரத்தில் அடுத்த 3 நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம்.
நான் கடவுளுக்கு முற்றிலும் மாறாக, அவன் இவனில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பாலா, இந்த படம் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என்று நம்புகிறார். அவரது நம்பிக்கையை உறுதிபடுத்தும் வகையில் டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.