Wednesday, May 25, 2011
இதையடுத்து அந்த கதையை வேறு நடிகரை வைத்து எடுக்க திட்டமிட்ட கவுதம் மேனன், கதையில் சிலபல மாற்றங்களை செய்தார். ஹீரோ தவிர மற்ற கேரக்டர்கள் தேர்வில் இறங்கிய கவுதம், முக்கிய கேரக்டரில் நடிக்க பிரகாஷ் ராஜிடம் கால்ஷீட் கேட்டார். கதையை முழுமையாக கேட்ட பிரகாஷ் ராஜோ... சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருக்கிறார். அப்படி மாற்ற முடியாது என்று கூறியதால் கால்ஷீட் தர மறுத்து விட்டாராம்.
முதலில் அஜித், இப்போது பிரகாஷ் ராஜ் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் ஏமாற்றம் தந்ததால் கோபத்தில் இருக்கும் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜிக்காக ஒதுக்கப்பட்ட கேரக்டரில் நடிகர் ஜீவனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.