Wednesday, May 11, 2011
அணையின் மேல் பகுதியில் 20 க்கும் அதிகமான வாகனங்களை வரிசையாக நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அணையைப் பார்க்க அனுமதிக்காததால் அவர்கள் எரிச்சல் அடைந்தனர். ரசாயனத்தை அணைக்குள் கொட்டி தண்ணீரின் நிறத்தை மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்துவோரும், வன விலங்குகளும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.
அணைக்கும், அணையில் உள்ள நீருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் படமெடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அனுமதி கிடைத்ததும் படக்குழுவினர் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிடுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்கென சென்னை தலைமையிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. படக்குழுவினர் சென்னையில் அனுமதி பெற்று வந்துவிடுவதால், இங்குள்ள அதிகாரிகளால் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடிவதில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.