Monday, June 06, 2011
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபயிற்சி (walking) மேற்கொள்ளும் அளவு ஆரோக்கியம் பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அத்துடன் அவருக்ககு அளிக்கப்பட்டு வந்த டயாலிஸிஸ் சிகிச்சையும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் இப்போது நலம் பெற்றுவருவதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன. எனினும் இன்னமும் பத்து நாட்களுக்கு மருத்துவமனையிலேயே பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள இருப்பதாகவும், பின்னர் ஒரு மாதம் வரை சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து அதன் பின் நாடு திரும்புவற்கு அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் மருத்துமனை வைத்தியர்களில் சிறந்த சிகிச்சை முறையே ரஜினிகாந்த் வேகமாக உடல்நலம் தேறிவருவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இத்தகவல்களை சிங்கப்பூரில் உள்ள மௌனட் எலிசபெத் மருத்துவமனை வைத்தியர்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.