
ஜெயமுரசு எழுதிய பாடல் பதிவுடன் "அழகின் பொம்மி" திரைப்பட துவக்க விழா நடைபெற்றது. கவிஞர்கள் பிறைசூடன், சிநேகன், இளையகம்பன் ஆகியோரும் இப்படத்திற்கான பாடல்களை எழுதுகிறார்கள்.
தொடர்ந்து பாடல்கள் பதிவு நடைபெற்று வரும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தேனி, கம்பம் மலைக்கிராமங்களில் நடைபெற இருக்கிறது. ஆர்.எச்.அசோக் ஒளிப்பதிவு செய்ய, கலையை புவனா கவனிக்கிறார். சண்டைப்பயிற்சி டைகர் சுகு.