Tuesday, June 21, 2011
நுணலும் தன் வாயாற் கெடும் என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல காஜல் அகர்வால் சும்மா இருக்காமல் ஒரு வார்த்தை விட, அது பெரிய பூதாகரமாக வெடித்திருக்கிறது. மும்பையிலிருந்து வந்திருக்கும் காஜல் அகர்வால் தமிழில் பழனி, சரோஜா, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த மகதீரா படம் இவருக்கு ஒரு தனி அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்தது. இந்நிலையில் தமிழில் வெளியான சிங்கம் படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
சமீபத்தில் இப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காஜல், சும்மா இருக்காமல் நான் என்றுமே தென்னிந்திய நடிகை என்று எண்ணியதில்லை. வடஇந்திய பெண்ணாக இருப்பது தான் எனக்கு பெருமை என்று கூறியிருக்கிறார். அவ்வளவு தான் இவரது பேச்சு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு படம் மூலம் வளர்ந்த காஜல், எவ்வாறு இப்படி பேசலாம் என்று தமிழ், தெலுங்கு திரையுலகினர் கொந்தளித்துவிட்டனர்.
குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், காஜல் அகர்வால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தெலுங்கு நடிகர் ஒருவர் கூறும்போது, இந்தியில் வாய்ப்பு இல்லாததால் தான் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வருகின்றனர். இங்கு வாய்ப்பு இல்லாமல் போனால், காஜல் போன்றவர்களின் நிலைமை என்னவாகியிருக்கும். காஜலின் இந்த பேச்சு அநாகரிகமானது. இந்த ரோஷமும் உணர்வும் உள்ள அவர் எதற்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க வேண்டும்", என்று பொரிந்து தள்ளியுள்ளார்.
அதேபோல் தமிழில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர்.குமார் கூறுகையில், காஜலுக்கு நிலையான இடத்தை கொடுத்ததே தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகம் தான். அதை மறந்து அவர் இப்படி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் இனி அவரை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதைத்தான் தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்வது என்று கூறுவார்கள்.