Wednesday, 6 July 2011
இந்து முறைப்படி திருமணம்: நயன்தாரா மதம் மாறுவாரா? பிரபுதேவா வற்புறுத்தல்.
Wednesday, July 06, 2011
பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்துள்ளார். நடிகை நயன்தாராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இருவரும் இரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர்.
இதற்காகவே ரம்லத்தை விட்டு விலகியுள்ளார். ரம்லத்தும் பிரபுதேவாவும் 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தை பிரபுதேவா பெற்றோர் ஏற்கவில்லை. எனவே இருவரும் வீட்டை விட்டு ஓடி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தனிக்குடித்தனம் நடத்தினார்கள். ரம்லத் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் பிரபுதேவாவை மணப்பதற்காகவே இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக் கொண்டார்.
இதுபோல் நயன்தாராவும் மதம் மாறுவாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். எனவே இவர்கள் திருமணம் இந்து முறைப்படி நடக்குமா? அல்லது கிறிஸ்தவ முறையில் நடக்குமா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா தேவாலயங்களுக்கு சென்று ஜெபம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பிரபுதேவா இந்து கோவில்களுக்கு செல்கிறார். திருமணத்தை இந்து முறைப்படி நடத்தவேண்டும் என்பது பிரபுதேவா விருப்பமாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
எனவே ரம்லத்தைபோல் நயன்தாரா இந்து மதத்துக்கு மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறாராம். ஆனால் நயன்தாரா குடும்பத்தினர் பிரபுதேவா கிறிஸ்தவ மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று பிரியப்படுகிறார்களாம். முதலில் இந்து முறைப்படியும் பிறகு கிறிஸ்தவ முறைப்படியும் திருமணத்தை நடத்திக் கொள்ளலாமா? என்றும் யோசிக்கின்றனர்.