முதல் காதல் மனைவி சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பிறகு, தனது 2வது காதலி கீதாஞ்சலியை திருமணம் செய்துகொண்ட டைரக்டர் செல்வராகவனுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் வாழ்த்து தெரிவித்தார் டைரக்டர் செல்வராகவனுக்கும், சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் - பத்மினி ராமன் தம்பதிகளின் மகள் கீதாஞ்சலிக்கும் 3ம்தேதி திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதையடுத்து செல்வராகவன் - கீதாஞ்சலி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று (4ம்தேதி) மாலை 6.30 மணிக்கு நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். மணமக்கள் கருணாநிதி காலில் விழுந்து ஆசி பெற்றனர். முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். டைரக்டர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், வசந்த், ஜெயேந்திரா, பட அதிபர்கள் எல்.சுரேஷ், ராம்குமார், கே.முரளிதரன், சாமிநாதன், எடிட்டர் மோகன், அல்லு அரவிந்த், மோசர்பேர் தனஞ்செயன், நடிகர்கள் ஜெயம் ரவி, பார்த்திபன், சுந்தர் சி, அப்பாஸ், நடிகைகள் சுஹாசினி, கவுதமி, கஸ்தூரி, மனோரமா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும், ஐகோர்ட் நீதிபதிகள், வக்கீல்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.