Tuesday, July 05, 2011
சினிமா என்பது மிகப் பெரிய ஊடகம், இதன் வழியே படித்தவர்களை மட்டுமின்றி படிக்காதவர்களையும் வசியப்படுத்த முடியும்.திரைப்படங்களில் சாதிகளின் பெயரை குறிப்பிட்டால் சென்சார் அதை வெட்டி எடுத்து விடும். ஆனால் சில இடங்களில் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது. இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான்.
பிரபல நடிகைகளான ஷில்பா ஷெட்டி, சமீரா ரெட்டி, மேக்னா நாயுடு, சிந்து மேனன், கவிதா நாயர் என சில கதாநாயகிகள் தங்களது பெயருடன் சாதிப் பெயர்களை இணைத்துக்கொள்கிறார்கள். இதற்குத்தான் தங்கர் பச்சான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் சாதிகளை ஒழிப்பதற்கு பெரியார் போன்ற தலைவர்கள் பட்டபாடு நாடறியும். தெருக்களுக்கு சாதி பெயர்களை வைப்பதை கூட அரசாங்கம் தடை செய்து விட்டது. அப்படி இருக்கும்போது, திரைப்படங்களில் மட்டும் சாதி பெயர்களை எப்படி பயன்படுத்தலாம்? இதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஆதரிக்கக்கூடாது என்றார் தங்கர்பச்சான்.
இதை பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது படத்தில் அழுத்தமாக ஒரு காட்சியில் பதிவு செய்திருப்பார். ஒரு சிறுவனும், சத்யராஜும் பேசியபடி வருவார்கள். உங்க பெயர் என்ன? என்று சத்யராஜிடம் பெயரைக் கேட்பான் அச்சிறுவன், பாலுத் தேவர் என்பார் சத்யராஜ். பாலுங்கறது உங்க பேரு� தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா? என்று கேட்பான்.
கன்னத்தில் அறைந்தது போல் இருக்கும் சத்யராஜிற்கு. இதை பார்த்து நிறைய பேர் சாதிய எண்ணத்தை விட்டொழித்தார்கள். பெயர் பின்னால் சாதிப் பெயரை சேர்ப்பதை தவிர்த்தனர். இப்போது நடிகைகள் தங்கள் பெயருடன் சாதியைப் பயன்படுத்துவது குறித்து தங்கர் பச்சான் சொன்னது போல் கண்டனத்திற்குரியதுதான். இதற்கு சென்சார் அமைப்பும் தடை போடவேண்டும்