Tuesday, July 05, 2011
ஸ்ரீமதி எனத் தலைப்பிடப்பட்ட ஹிந்தித் திரைப்படத்தின் படிப்பிடிப்புக்காக மாலைதீவுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே செலீனா ஜேட்லி இந்த சங்கடத்தை எதிர்கொண்டார். மாலைதீவிலிருந்து கொழும்பு வழியாக அவர் மும்பை திரும்புவதற்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், கொழும்பிலிருந்து மும்பைக்குச் செல்லும் விமானம் மிகத் தாமதமாகியது. இதனால் செலீனா ஜேட்லியும் அவருடன் பயணம் செய்த குழுவினரும் விமான நிலையத்திலுள்ள ஜன்னல் எதுவுமில்லாத சிறிய அறையொன்றில் தங்க நேரிட்டது. இலங்கை விஸா இல்லாததால் விமான நிலையத்திற்கு வெளியே செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் மும்பை செல்லும் விமானத்தில் ஏறுவதற்கான அறிவித்தல் வரும்வரை அந்த அறையைவிட்டு வெளியே வரவும் செலீனாவும் அவரின் குழுவினரும் அனுமதிக்கப்படவில்லை. விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அறைக்கு வெளியே காவலில் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அச்சூழ்நிலையில் மாட்டிக்கொண்டமை எனக்கு மிகவும் பீதியூட்டும் அனுபவமாகும் என செலீனா கூறியுள்ளார். இறுதியில் மும்பைக்குத் திரும்பியமை குறித்து செலீனா, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒருபோதும் அவ்வாறான சூழ்நிலைக்குள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டு நாம் திரும்பியுள்ளோம் என்பதுதான் நல்ல விடயம் என அவர் தெரிவித்துள்ளார். |