கொலிவுட் படங்களின் நிறை, குறைகளை தொலைக்காட்சி ஊடகத்தில் அலசி தள்ளும் நடிகை சுஹாசினி மணிரத்னம், ”நூற்றெண்பது” படத்தின் நாயகிகள் வசனம் பேசி நடித்ததை சொல்லி பெரிதாக பாராட்டியுள்ளார்.
ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனரின் இளமை ததும்பும் படம் இது. இன்றைய தலைமுறையினரின் நவநாகரீக படமும் கூட. இன்றைய கால கட்டத்தில் நாம் பார்த்து வரும் கதாபாத்திரத்தில் இருந்து மிகவும் மாறுபட்டு, ஒரு பகுத்தறிவு நிறைந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவது மிகவும் வரவேற்க்கத்தக்கது. சித்தார்த் நாயகனாக இல்லாமல் கதையோடு ஒன்றி நடித்திருப்பது மிகவும் அருமை. இதில் நாயகிகள் ப்ரியா ஆனந்த், நித்யா மேனன் இருவரும் தங்களின் வசங்களை பேசி நடித்திருப்பது, நமது தென்னிந்திய திரைப்பட உலகில் அபூர்வமாக உள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் திரைக்கதை அற்புதம். இந்த படம் உலகத்தரம் வாய்ந்த படம். இயக்குனர் ஜெயேந்திரா, தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராகிவிட்டார் என்றும் சுஹாசினி மணிரத்னம் குறிப்பிட்டுள்ளார். |