நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
ராஜ் குந்த்ரா லண்டனில் உள்ள முடி மாற்று சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்ல அழைத்துள்ளார் என்று ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இதைப் பார்த்த ஷில்பா கொதித்துப் போய்விட்டார். என் கணவர் குற்றமற்றவர். தற்போது நானும், அவரும் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து ஷில்பா டுவிட்டரில், எனது கணவருக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது என்று பத்திரிக்கையில் பார்த்தேன். பத்திரிக்கைகள் பொய்யான தகவல்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது பொய்யான தகவல். நானும், எனது கணவரும் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம். பத்திரிக்கைக்கு ஏமாற்றமே என்று கூறியுள்ளார். |