வேட்டை பற்றி நாளுக்கு நாள் புது விஷயங்கள் நம்மை அடைகின்றன. அண்ணன், தம்பியாக மாதவனும், ஆர்யாவும் வேட்டையில் நடித்துள்ளனர். சமீரா ரெட்டியும், அமலா பாலும் அக்கா, தங்கை. அக்கா சமீரா மாதவனின் ஜோடி, தங்கை அமலா ஆர்யாவின் ஜோடி. படத்தின் கதையும் காட்சியும் யூனிவர்சல் தரம் என்பதால் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறார் லிங்குசாமி. மாதவனுக்கும், சமீராவுக்கும் இந்தி மார்க்கெட் உள்ளதும் இந்த முடிவுக்கு காரணமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பிருந்தா சாரதி வசனம் எழுதியுள்ளார்.