Wednesday, 6 July 2011
ஐஸ்வர்யாராய் படத்தில் இருந்து நீக்கம்:,கர்ப்பத்தை மறைத்து விட்டார்.
Wednesday, July 06, 2011
டிகை ஐஸ்வர்யாராய் ஹீரோயின் என்ற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகியை மையமாக வைத்து நடக்கும் கதை என்பதால் அவருக்கு பெரும் தொகை சம்பளம் பேசி இருந்தனர். இப் படத்தின் இயக்குனர் மதூர் பண்டார்கர். இதன் இடையில் ஹீரோயின் படத்தில் இருந்து ஐஸ்வர்யாராயை திடீரென நீக்கி விட்டனர்.
அவர் கர்ப்பமானதால் நீக்கியதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஐஸ்வர்யா ராய் கோபமானார். இயக்குனரை கண்டித்தார். இதர நடிகர்-நடிகைகளும் டைரக்டர் மேல் ஆவேசப்பட்டனர். ஐஸ்வர்யா ராயை நீக்கியது ஏன் என்பது குறித்து மதூர் பண்டார்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஹீரோயின் படத்தின் கதையை 1 1/2 வருடமாக தயார் செய்தேன். எனது லட்சியம் கனவு எல்லாமே சிந்தனை எல்லாமே இந்த படத்தில் தான். இதில் ஐஸ்வர்யாராயை முக்கிய கேரக்டரில் நடிக்க தேர்வு செய்தோம். இதர நடிகர் நடிகைகளும் தேர்வுவானார்கள். படம் பற்றிய அறிவிப்பை கடந்த மே மாதமே வெளியிட்டோம்.
படப்பிடிப்பு ஜூன் 7-ல் துவங்கியது. இடையில் 24 நாட்கள் இருந்தது. அப்போது ஐஸ்வர்யாராய் கர்ப்பமான தகவலை தெரிவித்து இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. ஜூன் 21-ந் தேதிக்கு பிறகு தான் அவரது மாமனார் அமிதாப்பச்சன் மருமகள் கர்ப்பமான விவரத்தை வெளியிட்டார். நாங்கள் அதிர்ச்சியானோம். எதுவும் செய்யமுடியவில்லை.
ஐஸ்வர்யாராய் கர்ப்பமான விஷயத்தை எங்களிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். இதனால் பெரிய இழப்பை சந்தித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.