Thursday, July 07, 2011
நகமும் சதையுமாக, பார்ட்டியும் கிளாசுமாக ஒன்றி திரிந்த த்ரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் சண்டை போட்டுக் கொண்ட செய்திதான் கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மிகவும் நெருங்கிய தோழிகளான இவர்களுக்கும் புகைச்சல் எழ காரணம் என்னவாம்? சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அளித்த பேட்டியன்றில், தன் கணவர் கிருஷ்ணவம்சி இயக்கும் படத்தில் த்ரிஷா நடிக்கப் போவதாக கூறியிருந்தார்.
இதை கேள்விப்பட்டதுமே கொதித்து எழுந்து விட்டாராம் த்ரிஷா. நமக்குள் இருக்கும் நட்பு வேறு. தொழில் வேறு. என்னிடம் கதையே சொல்லவில்லை கிருஷ்ண வம்சி. கால்ஷீட்டும் கேட்கவில்லை. உண்மை அப்படியிருக்க, நான் அவர் படத்தில் நடிக்கிறேன் என்று ரம்யா எப்படி சொல்லலாம்? என்று கூறி ஆதங்கப்படுகிறார் த்ரிஷா.