Friday, July 08, 2011
சமீபத்தில் ஐதராபாத் சென்ற ஆர்யா, அங்கு சாலை விபத்தில் காயம் அடைந்திருக்கிறார். ஐதராபாத்தில் தனது நண்பர் ஒருவரின் கடை திறப்பு விழாவுக்காக காரில் அவசரமாக சென்று கொண்டிருந்தார் ஆர்யா. திடீரென விபத்தில் சிக்கி, தலையில் காயம் அடைந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். நெற்றியில் தையல்கள் போடப்பட்டது. இது குறித்து ஆர்யா கூறும்போது, ÔÔபெரிய விபத்து கிடையாது. மறுநாள் செல்வராகவனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். நெற்றியில் கட்டு போட்டிருந்ததால் எல்லோரும் இதைப் பற்றியே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்ÕÕ என்றார்.