மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'முகமூடி' படத்தில் அமலா பால் நடிப்பதாக தகவல் பரவியது. இது பற்றி அமலா பால் கூறியது: நான் நடிக்காத படத்தை பற்றி என்ன சொல்வது? 'முகமூடி' என்ற பெயரில் படம் எடுப்பதே எனக்கு தெரியாது. ‘அந்த படத்தில் நான் நடிக்கிறேன். ஜீவாவுக்கு ஜோடி’ என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது ஆச்சரியமாக இருந்தது. அடுத்ததாக விக்ரமுடன் நடித்துள்ள 'தெய்வத் திருமகள்' ரிலீசாக உள்ளது. இது எனக்கு பெரிய படம். இந்த பட ரிலீசுக்காகவே இத்தனை நாள் காத்திருந்தேன். தியேட்டரில் சென்று இப்படத்தை பார்ப்பேன். அடுத்ததாக 'வேட்டை' படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்கிறேன். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் அதர்வா ஜோடி. சில படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும்படி எனது கேரக்டரும் கதையும் அமைய வேண்டும் என விரும்புகிறேன்.
Friday, 8 July 2011
ஜீவாவுடன் நடிக்கிறேனா? அமலா பால் மறுப்பு.
Friday, July 08, 2011