Friday, July 08, 2011
பாடிகாட் படத்தின் ரீமேக்கான காவலன் படம் இப்போது தெலுங்கில் பாடிகாட் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். படத்தின் சூட்டிங் நடந்து வரும் நிலையில், பாடிகாட்டில் ஒரு நீச்சல் உடை காட்சி இருப்பதாகவும், அதில் நடிக்க த்ரிஷா ரூ.25 லட்சம் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த செய்தியை த்ரிஷா கடுமையாக மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நீச்சல் உடையணிவதற்காக ரூ.25 லட்சம் கூடுதலாக கேட்டேன் என்று சொல்வது அபத்தம். நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். தேவையில்லாம அதிக சம்பளமும் கேட்டதில்லை. இந்த செய்தியை கேள்விப்பட்டதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. மலையாளம் மற்றும் தமிழில் ஏற்கெனவே பாடிகாட் படத்தின் ரீமேக் ரிலீ ஸ் ஆகிவிட்டது. அந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு கவர்ச்சி காட்சிகள் இல்லை என்பது தெரியும். அப்படியிருக்கும்போது நான் எப்படி நீச்சல் உடையில் நடிப்பதற்கு அவ்வளவு பெரிய தொகை கேட்டிருக்க முடியும்?, என்று பதில் கேள்வி எழுப்புகிறார்.