Saturday, July 09, 2011
நடிகர் ஜீவாவிற்கு மிகப்பெரிய கமர்சியல் ஹிட் படமான "தெனாவட்டு" படத்தை கொடுத்த டைரக்டர் வி.வி.கதிர், 2 வருட இடைவெளிக்கு பின்னர் தமிழில் மீண்டும் ஒரு படம் இயக்குகிறார். இதில் ஹீரோவாக விமல் நடிக்க இருக்கிறார். "தெனாவட்டு" படத்திற்கு பிறகு தமிழில் இருந்து காணாமல் போன கதிர், தெலுங்கில் தாரங்கரத்னா, அருந்ததி நடிப்பில் "முக்கண்டி" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தபடம் முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் குறித்து கதிர் பேசுகையில், முக்கண்டி என்றால் மூன்றாவது கண் என்ற பெயர். அதர்மத்தை அழிக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தை முடித்த பின்னர் மீண்டும் தமிழில் ஒரு படம் இயக்க இருக்கிறேன். இதில் ஹீரோவாக களவாணி நாயகன் விமலும், புதுமுகம் ஒருவரும் நடிக்கின்றனர். "தெனாவட்டு" படத்தை போன்று இந்த படமும் காமெடி கலந்து ஆக்ஷன் படமாக அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும். அதேசமயம், கடைசி க்ளைமாக்ஸ் காட்சியில் கனமான மனதோடு, ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தபடம் இருக்கும் என்கிறார் கதிர்.