நடிகர் கார்த்தி-ரஞ்சனி திருமணத்தன்று வர முடியாததால், நேற்று கார்த்தி இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார் முதல்வர் ஜெயலலிதா. நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனிக்கும், கடந்த 3ம் தேதியில் கோவையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் கார்த்தி-ரஞ்சினி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 7ம் தேதி நடந்தது. மணமக்களை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லகண்ணு, செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி. மலைசாமி, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பத்திரிகையாளர் சோ, வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள். இவர்கள்தவிர நடிகர்கள் விஜய், பிரசன்னா, பரத், ஜெய், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் மீனா, சுஹாசினி, பழம்பெரும் நடிகை மனோரமா, வைஜெயந்திமாலா உள்ளிட்டவர்களும், படஅதிபர்கள், ஏ.வி.ஏம். சரவணன், ராம்குமார், டைரக்டர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, வசந்த், சமுத்திரகனி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இந்நிலையில் அரசு வேலைகள் காரணமாக திருமணத்திற்கும், வரவேற்பு நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்ள முடியாததால், நேற்று மாலை 6மணியளவில், கார்த்தியின் வீட்டிற்கு நேரிலே சென்று கார்த்தி-ரஞ்சனியை வாழ்த்தினார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வருடன் அமைச்சர்களும் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.