
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால் படத்தின் நாயகி கல்வி இங்குள்ள ஆரோவில் கிட்டத்தட்ட 2ஆண்டுகள் வசித்துள்ளார். இதுவும் கூட படத்தில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரோவிலில் வசித்து வரும் 48 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாட்டினருக்காக பிரத்யேகமாக திரையிடப்படுவது கூடுதல் விசேஷமானது.
இதனிடையே இந்த கவுரவத்திற்கு படத்தின் இயக்குநர் விஜயபத்மா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள நன்றி செய்தியில் நர்த்தகி திரைப்படத்தினை வெற்றிபடமாக மாற்றியதற்கு என் நன்றிகள். தமிழகத்தை போலவே அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மற்றொரு அம்சமாக புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லிலும் நர்த்தகி படம் திரையிடப்பட இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.