கார்த்திக்கு ஏற்ற மணப்பெண் ரஞ்சனி தான் என்று கூறுகிறார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் "பழனி" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், "மோதி விளையாடு", "சரோஜா" உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு கார்த்தியுடன் "நான் மகான் அல்ல" படத்தில் ஜோடி போட்டு நடித்தார். அப்போது முதலே இருவருக்கும் இடையே நிறைய கிசுகிசுக்கள் எழுந்தது. ஆனால் இதனை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் கார்த்திக்கும், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்தமாதம் ஜூலை 3ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் கார்த்தி திருமணத்தை பற்றி காஜல் அகர்வால் கூறியதாவது, கார்த்தி எனது நெருங்கிய நண்பர். "நான் மகான் அல்ல" படத்தில் நடித்த போது நிறைய விஷயங்களை அவருடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். கார்த்தி உண்ணதமானவர். கார்த்திக்கு அடுத்தமாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. தனக்கு ஏற்ற மணப்பெண்ணை தான் அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தற்போது நான் தெலுங்கு படங்களில் பிஸியாக உள்ளேன். விரைவில் தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். கே.வி.ஆனந்த் அவர்களுடைய படங்கள் அனைத்தையும் பலமுறை பார்த்திருக்கிறேன், அவருடைய படம் என்றாலே ஒரு தனி ஸ்டைல் தான். நான் நடிக்கபோகும் படத்திலும் எனக்கு அருமையான கேரக்டர். அவருடைய படத்தில் நடிப்பது மிகுந்த ஆவலாக இருக்கிறது.
Sunday, 19 June 2011
கார்த்திக்கு ஏற்ற ஜோடி ரஞ்சனி: சொல்கிறார் காஜல் அகர்வால்!
Sunday, June 19, 2011