தமிழ் திரையுலகில் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் குதித்த கார்த்திக்இ சினிமாவில் ஜொலித்த அளவு அரசியிலில் ஜொலிக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் ஹீரோவாக பட்டையை கிளப்பிய கார்த்திக்இ அரசியலில் காமெடியன் போலதான் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். கடுமையான அரசியல் பணிகளுக்கு(?) இடையே இன்னொரு பணியையும் செய்து வருகிறார் கார்த்திக். அது... தன் மகன் கவுதமை நாயகன் ஆக்கும் பணி. வாரிசு அரசியல் போல... வாரிசு சினிமாவிற்கு கார்த்திக் மட்டும் விதி விலக்கா என்ன? தன் மகன் கவுதமுக்கு ஏற்ற கதையை தேர்வு செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார். அநேகமாக மகனின் முதல் படம் டைரக்டர் மணிரத்னத்தின் படமாக இருக்கலாம் எனறு கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். மணிரத்னமோ... நடிகர் ஆர்யாவிடமும் ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். இருவரில் யாரை வைத்து முதலில் படம் இயக்கப்போகிறார் என்பது மணிரத்னத்துக்கே வெளிச்சம்! (வெளிச்சம்னு சொன்னதும்... மணிரத்னம் வெளிச்சத்துல படம் எடுக்கப்போறாரோன்னு நினைச்சிடாதீங்க. சினிமா விஷயத்தில் மணிரத்னம் தன் பாணியை மாற்றிக் கொள்ளவே மாட்டாராம்!)