Sunday, June 19, 2011
இது தாரம், சாந்தி அப்புறம் நித்யா, அநாகரீகம், இளமைக் காதல், ரதி நிர்வேதம், ஒரு சந்திப்பில்..., அரங்கேற்ற நாள், இருளில் நான் உள்ளிட்ட அந்த மாதிரி படங்கள் ரீலிஸாகும் காலம் போலும்! ஒரே அந்த சமாச்சார படங்களாக வெளியாகிவரும் வேளையில், அர்ச்சனா சர்மா நடித்து, கடந்த வாரம் வெளியான சாந்தி அப்புறம் நித்யா, ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து, இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல கடந்த வெள்ளியன்று அநாகரிகம் படம் வெளியானது. இதில் பாபு கணேசுடன் முன்பு ஒரு படத்தில் ஜோடி போட்ட வகிதா நாயகி! அம்மணி வரிந்து கட்டி கவர்ச்சி காட்டியிருந்தாலம் அர்ச்சனா சர்மாவின் கவர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லையாம். அதனால் அநாகரிகத்தைக் காட்டிலும் சாந்தி அப்புறம் நித்யாவுக்கு இளைஞர் கூட்டம் அலைமோதுகிறதாம். தமிழ்சினிமாக்கள் சரியாக போகலைங்கிறது அப்போ பொய்யா?