Sunday, June 19, 2011
எஸ்.பி கிரியேஷன்ஸ் சார்பில் பிரதீஷ், சந்தோஷ் தயாரிக்கும் படம், ‘ராஜபாட்டை’. விக்ரம், தீக்ஷா சேத் ஜோடி. ஒளிப்பதிவு, மதி. இசை, யுவன் சங்கர் ராஜா. பாடல்கள், யுகபாரதி. கதை, சீனுவாசன். வசனம், பாஸ்கர் சக்தி. திரைக்கதை எழுதி சுசீந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்று தொடங்கியது. நிருபர்களிடம் விக்ரம் கூறியதாவது: சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’ படங்களை பார்த்தேன். அவற்றிலிருந்து மாறுபட்ட கதையுடன் ‘ராஜபாட்டை’ உருவாகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறேன். ‘தூள்’, ‘சாமி’ படங்கள் மாதிரி,ஒரு மாஸ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். அது‘ராஜபாட்டை’யில் நிறைவேறியுள்ளது. இதில் ஜிம் பாய் கேரக்டரில் நடிப்பதற்காக, தீவிர உடற்பயிற்சிகள் செய்தேன். காமெடி, காதல், ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சக படமாக இது உருவாகிறது. இவ்வாறு விக்ரம் கூறினார். பேட்டியின்போது, இயக்குனர் சுசீந்திரன், தீக்ஷா சேத், தம்பி ராமய்யா, அருள்தாஸ், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் மு.காசி விஸ்வநாதன், தயாரிப்பாளர் ரமேஷ்பாபு உடனிருந்தனர்.