நடிகர் விக்ரம் - ஸ்ரேயா நடித்த கந்தசாமி பட தொடக்க விழாவை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அதேபோல அப்படம் ரீலிஸ் ஆன நேரத்தில் நடத்தப்பட்ட பிரமாண்ட விழாவை யார் மறந்தாலும் தமிழகத்தில் உள்ள 30 கிராமங்கள் மட்டும் ஒருநாளும் மறக்காது. பட ரீலிஸின்போது 30 கிராமங்களை கந்தசாமி படக்குழு தத்தெடுப்பதாகவும், அந்த கிராமங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி, அடிப்படை வசதிகளை செய்தி தருவது கந்தசாமி படக்குழுவின் பணி; இந்த வேலையை கந்தசாமி அறக்கட்டளை கவனிக்கும் என்று கூறி மிகப்பெரிய பப்ளிசிட்டி தேடிக் கொண்டனர்.
சினிமாக்காரர்களின் பேச்சையெல்லாம் உண்மையென நம்பிய 30 கிராம மக்களும், கந்தசாமி குழுவினரின் அழைப்பை ஏற்று சென்னை வந்து, விழாவில் பங்கேற்று மூன்று லட்சத்துக்கான டம்மி செக்கையும் பெற்றுச் சென்றனர். கட்-அவுட் போன்ற அந்த டம்மி செக் பெற்ற 30 கிராம மக்கள்தான் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். டம்மி செக்குடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கந்தசாமி படக்குழுவினர், அதற்கு பிறகு அந்த கிராமங்கள் பக்கமே தலைவைத்து படுக்கவில்லையாம். மூன்று லட்சத்திற்கான பலனை ஒரு கிராமம்கூட அனுபவிக்கவில்லை என்பதுதான் கொடுமை.ஏன் இந்த தாமதம்? என்று கந்தசாமி குழுவினரிடம் கேட்டால், இந்த மாதிரி பணம் கொடுக்குறதுக்கு அரசாங்கத்திடம் அனுமதி வாங்கணும்; அதில்தான் சிக்கல் நீடிக்கிறது என்று கூறி நழுவுகிறார்கள்.பாவம்!. சினிமாக்காரன் பேச்சு... விடிஞ்சா போச்சுன்னு தெரியாத கந்தசாமி கிராம மக்கள்!!