Saturday, June 18, 2011
அஜீத், திரிஷா, ஜோடியாக நடித்த “மங்காத்தா” படம் ஆகஸ்டில் ரிலீசாகிறது. வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரீ ரிக்கார்டிங், டப்பிங், இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. படம் பற்றி வெங்கட்பிரபு சொல்கிறார்.
“மங்காத்தா” படத்தில் அஜீத் வேடம் ரசிகர்களை வரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் அர்ஜூன் ஜோடியாக ஆண்ட்ரியா வருகிறார். அவர் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார்.
ஆகஸ்டில் “மங்காத்தா” படத்துடன் விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7ஆம் அறிவு போன்ற படங்களும் ரிலீசாவது பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரே நேரத்தில் இத்தனை படங்கள் ரிலீசாவது. ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்றார்.