Saturday, June 18, 2011
சுமார் 2மணி நேரம் தாமதமாக சென்னையில் நடந்த தனது "மார்கண்டேயன்" பட ஆடியோ விழாவிற்கு வந்த சல்மான்கானை வரவேற்று அழைத்து சென்ற ஃபைட் மாஸ்டர் பெப்ஸி விஜயன், முதலில் சல்மானை ரசிகர்கள் அமர்ந்திருந்த திரையரங்கினுள் இடம் ஒதுக்கி அமர செய்து திரையில் டிரையிலர், பாடல்களை போட்டு காட்டினார். அப்பொழுது சல்மானின் இந்தபக்கம் சீமானும், அந்தப்பக்கம் விஜய்யும் அமர்ந்து படம் பார்த்தனர். அப்பொழுது விஜய்யுடன் சினேகமாக புன்னகைத்த சல்மானுக்கு சீமானை தெரியவில்லை. அதனால் எதுவும் இவரிடம் அவர் பேசவில்லை. அதே நேரம் டிரையிலர் - பாடல்கள் திரையிடு முடிந்து மேடையேறிய சல்மானின் அருகில் ஸ்ரேயா சரன். அப்பொழுது விஜய் பக்கம் திரும்பாத சல்மான் தொடர்ந்து ஸ்ரேயாவுடன் கடலை வறுத்துக் கொண்டிருந்தார். ஸ்ரேயாவும் தான். இதனால் ஸ்ரேயாவை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒன்றுக்கு இரண்டுமுறை அழைத்தும் அது அம்மணியின் காதில் விழவில்லை. அதனால் எழவில்லை. அப்புறம் தியேட்டரே ஒரு சவுண்ட் கொடுத்ததும் வெட்கத்துடன் கிளம்பினார் ஸ்ரேயா!