கொலிவுட் படங்களில் நடிக்கிற போது பாலிவுட்டின் பெருமைகளை பேசியிருக்கிறார். எனக்கு தென்னிந்திய பட உலகில் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன.
ஆனால் பாலிவுட் வாய்ப்புக்காக ஆர்வம் காட்ட காத்திருக்கேன், தெற்கு வடக்கு வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறேன்.
பாலிவுட் -தென்னிந்திய படங்களில் நடிப்பதில் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்களா என்று என்னிடம் கேட்கிறார்கள். இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ரசிகர்களின் மனோபாவமும் வெவ்வேறாக இருக்கும். பாலிவுட் பட ரசிகர்கள் ஒரு படத்தில் நடிகையின் நடிப்பை ரசித்தபிறகு இன்னொரு படத்தினை பார்த்து அந்த நடிகையின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். .ஆனால் தென்னிந்தியாவில் படத்தில் நடித்தவர்கள் மேல் பாசம் காட்டுவார்கள். இங்கே கோலிவுட் சினிமாகாரர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டுவதை நினைத்தால் மிகவும் கொமிடியாக உள்ளது. ரசிகர்கள் இவ்வளவு அசட்டுத்தனமாக இருப்பதை நினைத்தால் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நினைத்தால் கொஞ்சம் மிரட்சியாக உள்ளது. இரண்டு வருடத்துக்கு முன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போயிருந்த போது எனக்கு அந்த பயங்கரமான அனுபவம் நேர்ந்தது. கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி விறுவிறுவென என்னருகே வந்தார். விருட்டென தன் கையை கீறி சொட்டிய ரத்தத்தால் எனக்கு பொட்டு வைக்க நெருங்கினார். என் நெஞ்சு திக்கென பதறியது படபடப்பு அடங்காமல் அங்கிருந்து ஓடினேன் என்கிறார் சமீரா. |