Saturday 30 July 2011
வானம் பட விளம்பர சர்ச்சை: பரத் மீது சிம்பு தாக்கு.
Saturday, July 30, 2011
சிம்பு, பரத் இணைந்து நடித்த படம் “வானம்”. சமீபத்தில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கான விளம்பரங்களில் பரத்தை விட சிம்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது பரத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் கூறும்போது,
“இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் இருவருக்குமே சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்த போதே இதனை தெரிவித்தேன். ஏற்றுக் கொண்டனர். ஆனால் படம் ரிலீசான பின்பு, அதன்படி நடக்க வில்லை.
விளம்பரங்களில் எனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இனிமேல் இரு ஹீரோக்கள் படங்களில் நடிக்க யோசிப்பேன்” என்றார்.
இதற்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
இரு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் யாருக்கு மார்க்கெட் இருக்கிறதே, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் விளம்பரம் செய்வார்கள். படத்தில் நடித்த எல்லா நடிகர்களின் படங்களையும் போஸ்டரில் போட முடியாது. பரத் கருத்து பற்றி எனக்கு கவலை இல்லை.நான் என் வேலைகளை செய்தபடி போய்க்கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
“வானம்” படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் கூறும்போது,
“பரத்தை விட சிம்புக்கு மார்க்கெட் அதிகம். சிம்பு “மெகா ஸ்டார்” ஆக உள்ளார். எனவே அவரை வைத்துதான் விளம்பரப்படுத்த முடியும். பரத் பேசும் கருத்துக்கள் தொழில் ரீதியாக தவறானவை. பரத் கேரக்டரில் நடிக்க முதலில் நகுலைத்தான் தேர்வு செய்தோம். சிம்புவும் பரத்துக்கு சிபாரிசு செய்ததால் அவரை நடிக்க வைத்தோம்” என்றார்.