Tuesday, July 12, 2011
திரையுலக அந்தரங்க அனுபவங்களை வாக்குமூலமாக சொல்லப்போகிறார் நடிகை சோனியா அகர்வால். ஆனால் இது சோனியாவின் நிஜ திரையுலக அனுபவங்கள் அல்ல; ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில்தான் அப்படியொரு வாக்குமூலம் கொடுக்கப் போகிறார். செல்வராகவனுடனான விவாகரத்துக்கு பிறகு சோர்ந்து போகாமல், சினிமா வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கும் சோனியாவுக்கு, அடுத்தடுத்து கைமேல் பலன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. வானம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்த சோனியா, மேலும் சில படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.