நடிகை சிம்ரனின் புதிய தோழியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வாங் அறிமுகமாகியிருக்கிறார். சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை சிம்ரம். திருமணத்திற்கு பிறகு நடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்ட சிம்ரன், தற்போது குணச்சித்திர கேரக்டர்களிலும், டி.வி., சீரியல் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வாங்கின் நட்பு கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் டொரண்டாவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நடிகை சிம்ரனுக்கு அழைப்பு வந்திருந்தது. இதில் சிம்ரன் கலந்து கொண்டார். அப்போது பிரபல ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வாங்கின் அறிமுகம் சிம்ரனுக்கு கிடைத்தது. இருவரும் நிறைய விஷயங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். இந்தசந்திப்பு குறித்து சிம்ரன் கூறும்போது, சினிமாவை பற்றி நாங்கள் நிறைய பேசினோம். குறிப்பாக இந்திய சினிமாவை பற்றி ஹிலாரி கேட்டறிந்தார். மேலும் இந்திய கலாச்சாரங்கள் பற்றியும் நிறைய கேட்டறிந்தார். இந்தி சினிமா மற்றும் இங்குள்ள பல்வேறு மொழி திரைப்படங்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினார். என்னுடன் அவர் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார் என்றார்.