தமிழ் சினிமாக்களில் டைரக்டர்கள் ஹீரோவாக நடிப்பது புதிதல்ல; ஆனால் ஒரே படத்தில் 16 டைரக்டர்கள் நடிப்பது கொஞ்சம் புதுசுதானே. சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக 16 டைரக்டர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் "ஞானி". ஹீரோவாக, மாயாண்டி குடும்பத்தாரில் நடித்த டைரக்டர் தருண்கோபி நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வேதா நடிக்கிறார். இவர்களுடன் டைரக்டர்கள் எஸ்.எஸ்.ஸ்டன்லி, பிரபுசாலமன், தம்பி ராமய்யா, சரவண சுப்பையா, சிங்கம்புலி, ரவிமரியா, அரவிந்த்ராஜ், சித்ராலட்சுமணன், சசிமோகன், கேயார், செல்வபாரதி, பிரவின்காந்தி, சஞ்சய்ராம், ஆர்த்திகுமார் உள்ளிட்ட 15 பேர் இணைந்து நடிக்கிறார்கள்.
பிரசாந்த், ராகவேந்திரா, ராபர்ட், இப்ராகிம், அய்யர் ஆகிய 5 புதிய இசையமைப்பாளர்கள் சேர்ந்து இசையமைக்கிறார்கள். மதியழகன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் டைரக்டர் ஆர்த்தி குமார். சுபாசினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.எஸ்.குமார், எல்.சுரேஷ்குமார் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் கதைக்களம் கிராமம்தான். அண்ணனை கொன்றவர்களை தம்பி பழிவாங்குகிற கதை. முத்து, முருகன் இருவரும் அண்ணன், தம்பி. இருவரும் ஒரு மரக்கடைக்காரரிடம் வேலை செய்கிறார்கள். ஒரு கொலை வழக்கில் தங்களை காட்டிக்கொடுத்து விடுவானோ என்ற பயத்தில், கடைக்காரரின் தம்பியும், மைத்துனர்களும் சேர்ந்து முத்துவை கொலை செய்கிறார்கள். அண்ணன் முத்துவை கொன்றவர்களை, தம்பி முருகன் பழிவாங்குகிறான். விதி, அவனையும் பழிவாங்குகிறது.பழி வாங்குறத விட மாட்டாங்க போல இருக்கே..!