Tuesday, May 17, 2011
"சிந்து சமவெளி" படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலா பால், "மைனா" பட வெற்றிக்குப் பிறகு பிசியான நடிகையாகிவிட்டார்.
அழகுப் பதுமையான அமலா பால் தற்போது வித்தியாசமான ஸ்டைலில் பவனி வருகிறார்.
அந்த ஸ்டைலில் மயங்கிப் போகும் நடிகர்கள், அவரையே தனது படத்தில் கதாநாயகியாக்குங்கள் என்று மயக்க கட்டளை போடுகிறார்களாம். பெரும்பாலான கதாநாயகிகள் மூக்குத்தியை அணிவது இல்லை. அது தங்களது அழகை குறைப்பது மட்டுமின்றி, வயதையும் அதிகமாக்கிக் காட்டும் என்ற எண்ணத்தால் தான் அதை பெரும்பாலான நடிகைகள் விரும்புவதில்லை.
அமலா பால் இதற்கு நேரெதிராக இருக்கிறார். தனது இடது புற மூக்கில் சின்னதாக ஒரு வளையத்தை மாட்டிக் கொண்டு, சினிமா தொடர்பான விழாக்களுக்கு வருகிறார். இந்த வித்தியாசமான ஸ்டைல், அமலா பாலின் அழகுக்கு மேலும் அழகூட்டவே நடிகர்கள் மட்டுமின்றி அனைவரும் மயங்கிப் போகின்றனராம். "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் ஜோதிகா, இதுபோல் மூக்குத்தி வளையம் அணிந்து நடித்தது ரசிகர்களை கிறங்கடித்ததாம். அதை இப்போது அமலா பால் நிஜத்தில் செய்து வருகிறார்.