இப்படத்தின் மூலமாக ஜித்தன் ரமேஷ் கொலிவுட்டில் ரீஎன்ட்ரி ஆகியுள்ளார்.
நாயகியாக சஞ்சிதா படுகோனே நடித்துள்ளார். படத்தை திருமலை கிஷோர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பு காட்சி, சென்னையில் உள்ள ”போர் பிரேம்” திரையரங்கில் நடந்தது.
படத்தில் நாயகனாக நடித்த ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரையும், படத்தை இயக்கிய திருமலை கிஷோர், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கொலிவுட் நாயகர்கள் ஜீவா, சிம்பு, பரத், கார்த்தி, ஸ்ரீகாந்த், விஷால், சிபி, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஜனநாதன் என பலரும் பாராட்டியுள்ளார்கள். |