கார்த்தி கல்யாணத்திற்கு அவரது அண்ணியும், நடிகையுமான ஜோதிகா டிப்ஸ் கொடுத்திருக்கிறார். "பருத்திவீரன்" படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, "பையா", "நான் மகான் அல்ல", "சிறுத்தை" என்று ஹிட் படங்களாக கொடுத்து, தமிழக ரசிகர்களின் இதயத்தில் சீக்கிரமாக இடம்பிடித்தார். இன்னும் சில தினங்களில், அதாவது வருகிற ஜூலை 3ம் தேதி இவருக்கும், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கோவையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் கல்யாணத்திற்கு பிறகு மனைவியிடம் எப்படி அன்பாய் பழக வேண்டும், எப்படி எல்லாம் பரிசு கொடுத்து அசத்த வேண்டும் என்று கார்த்திக்கு டிப்ஸ் கொடுத்து அசத்தி வருகிறாராம் ஜோதிகா. அதனால் மனைவியிடம் அடிவாங்க மாட்டேன் என்று வெட்கத்தோடு கூறும் கார்த்தி, பத்திரிகையாளர்களை சந்தித்து எல்லோரும், எங்களை வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டு கொண்டார். தற்போது "சகுனி" படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தபடத்தில் அரசியல்வாதி வேஷம் கட்டியிருக்கிறார். இதற்காக அரசியல்வாதிகளின் நடை, உடை, பாவனைகளை எல்லாம் கவனித்து வருகிறாராம்.
Tuesday, 28 June 2011
கார்த்தி கல்யாணத்திற்கு டிப்ஸ் கொடுத்த ஜோதிகா!
Tuesday, June 28, 2011