Tuesday, 28 June 2011
கர்ப்பமானதால் படத்தில் இருந்து நீக்குவதா? ஐஸ்வர்யாராய் ஆவேசம்; இந்தி டைரக்டர் மீது வழக்கு.
Tuesday, June 28, 2011
ஐஸ்வர்யாராய் கர்ப்பமாகியுள்ளதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் இருவரும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் இன்னொரு புறம் கர்ப்பத்தை காரணம் காட்டி ஐஸ்வர்யாவின் திரையுலக மார்க்கெட் சரிகிறது. இந்தி பட இயக்குனர் மதூர் பண்டீர்கர் “ஹீரோ யின்” என்ற பெயரில் தான் எடுக்கும் படத்துக்கு ஐஸ்வர்யாராயை கதா நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.
அடுத்த மாதம் இந்த படத்தின் படிப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமான தகவல் அவரை அதிர்ச்சியடைய செய்தது. இதனால் ஐஸ்வர்யா ராயை நீக்கி விட்டு கத்ரீனா கபூர் அல்லது பிரியங்கா சோப்ராவை கதாநாயகியாக்க முயற்சித்து வருகிறார்.
இது ஐஸ்வர்யாராயை எரிச்சல் பட வைத்துள்ளது. தன்னை நீக்கியதை கண்டித்து நெருக்கமானவர்களிடம் இயக்குனரை காரசாரமாக பேசி திட்டி வருகிறார். அத்துடன் “ஹீரோயின்” படத்தில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். இதற்காக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.