
கனா கண்டேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிருதிவிராஜ்.
“பாரிஜாதம்”, “மொழி”,“சத்தம் போடாதே”, “கண்ணாமூச்சி ஏனடா”, “வெள்ளித்திரை,” “அபியும் நானும்”, “நினைத்தாலே இனிக்கும்” உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கேரள மாநிலம் பாலகாட்டில் பிருதிவிராஜூக்கும், சுப்ரியா மேனனுக்கும் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் இத் திருமணம் நடந்ததாகவும், நெருக்கமான உறவினர்கள் சிலர் மட்டுமே இதில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 50 பேர் திருமணத்தில் கலந்து கொண்டார்களாம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விசேஷ அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. அதை காட்டியவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மே 1-ந் தேதி திருமண வரவேற்பை எர்ணாகுளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்துகிறார். இதற்கு நடிகர்-நடிகைகளை அழைக்க திட்டமிட்டு உள்ளார்.