கிட்டத்தட்ட 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாக மின்னி, "பாசக்கார நண்பர்கள்" படத்தில் கதாநாயகியாக நடித்து, குமரியாக சமீபத்தில் திரைக்கு வந்த திவ்யா நாகேஷ், அடுத்து நடித்துள்ள தமிழ்படம் "மதிகெட்டான் சாலை". திருமலை இன்னோவேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆதர்ஷ் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். ஆதர்ஷ் - திவ்யாநாகேஷ் ஜோடியுடன் வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், சிங்கமுத்து, நரேன், லாவன்யா, ஈரோடு கோபால், சேதுபதி உள்ளிட்டவர்களும் நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜி.பட்டுராஜன். எஸ்.தாஜ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
ஒருதலைக்காதலால் ஒரு இளைஞன் படும்பாடும்! அதனால் மதிகெட்டு அவன் செய்யும் காரியங்களும் தான் இப்படத்தின் கரு, கதை, களம் எல்லாம் என்கிறார் இயக்குநர் ஜி.பட்டுராஜன். சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் "யார்" கண்ணனில் தொடங்கி, "ரேனிகுண்டா" பண்ணீர் செல்வம் வரை பலரிடம் இவர் துணை, இணை இயுக்குநராக இருந்தபோது செய்த, செயற்கரிய காரிங்களை பற்றி மேடையில் பாராட்டாத பிபலங்களே இல்லை என தயாரிப்பாளர் சங்க நாற்காலி தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் உள்ளிட்ட பல வி.ஐ.பி.க்கள் பட்டுராஜனை பாராட்டினார். அன்று திரையில் ஒலி, ஒளிப்பரப்பாகிய பாடல் மற்றும் டிரையிலர் காட்சிகளும் அதை பறைசாற்றின!