முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
Tuesday, 28 June 2011
சிவகுமார் குடும்பத்தினர் நேரில் சென்று, ஜெயலலிதாவை திருமணத்திற்க்கு அழைத்தனர்
Tuesday, June 28, 2011
சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.
இதேவேளை தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர் ஆர். சரத்குமார், பொதுச்செயலர் ராதாரவி, துணைத் தலைவர் மனோரமா, செயற்குழு உறுப்பினர்கள் சத்யராஜ், மயில்சாமி, குயிலி உள்ளிட்டோர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.