Tuesday, May 17, 2011
ரஜினி “ராணா” படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான பட பூஜையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபிகா படுகோனேயும் நடித்த சீன்கள் படமாக்கப்பட்டன.
அப்போது ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் “ராணா” படப் பிடிப்பு தொடர்ந்து நடக்குமா? என்று கேள்விக்குறி எழுந்தது.
படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு இப்படத்தை எடுக்க இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணா படம் கைவிடப் பட்டதா? என்று அப்படத்தை டைரக்டு செய்யும் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-
ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளிப் போடவும் இல்லை. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம். ஜூலையில்தான் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.
தாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்துள்ளேன். அடுத்து லண்டன் செல்ல இருக்கிறேன். படத்தை கைவிட்டு விட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. அதை நம்ப வேண்டாம். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கும்.
இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.