ரஜினி உடல் நலம் தேறி வந்தாலும் ஆறு மாதங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறார்களாம் மருத்துவர்கள்.
அதுமட்டுமல்ல, எப்போதும் ராசி பார்க்கிற விடயத்தில் ரஜினியை போல இன்னொருவரை பார்க்க முடியாது என்கிறார்கள் திரையுலகத்தில். ராணா துவங்கிய முதல் நாளே தன்னை மருத்துவமனைக்கு அனுப்பிய ராசியை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று கணிக்கிறார்கள். எனவே இந்த படம் தொடர்ந்தாலும் அதில் ரஜினி நடிக்க மாட்டார். மாறாக இவரது கிராபிக்ஸ் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு சரத்குமார் போன்ற சில ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை முடிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. |