Wednesday, June 22, 2011
நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் ஆனது உறுதியாகி உள்ளது. 'நான் விரைவில் தாத்தா ஆகப் போகிறேன்' என்று ட்விட்டரில் அமிதாப்பச்சன் மகிழ்ச்சியுடன் எழுதியுள்ளார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும், கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படாத வதந்தியாகவே உலா வந்தது. இந்நிலையில் தன் மருமகள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமடைந்திருப்பதை தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன். ட்விட்டரில் அவர் எழுதிய செய்தியில், 'நான் விரைவில் தாத்தா ஆகப் போகிறேன். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்' என்று கூறியுள்ளார்.