Wednesday, June 22, 2011
ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி அங்கேயே அபார்ட்மென்ட் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இரண்டு வாரத்தில் அவர் சென்னை திரும்புவார்.
இதற்கிடையில் ரஜினியை பார்க்க நடிகர் சிரஞ்சீவி திடீரென்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். ரஜினி தங்கியுள்ள வீட்டுக்கு போய் அவரிடம் உடல் நலம் விசாரித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்புக்கு பின் சிரஞ்சீவி கூறும் போது ரஜினி நலமாக உள்ளார். விரைவில் சென்னைக்கு வர ஆர்வமாக இருக்கிறார் என்றார்.
ரஜினி குணமானதையடுத்து ராணா பட வேலைகள் விறுவிறுப்பாகியுள்ளன. அரங்குகள் அமைக்கவும் நடிகர் நடிகைகள் கால்ஷீட்களை புதுப்பிக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. ரஜினி திரும்பியதும் உடனடியாக படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளனர்.