Tuesday, May 17, 2011
டைரக்டர் பாரதிராஜாவின் இயக்கத்தில் "அலைகள் ஒய்வதில்லை" படத்தில் அறிமுக நாயகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தார் ராதா.
இவரும், இவரின் பாசத்துக்கு உரிய சகோதரி அம்பிகாவும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்கள்.
முன்னணி நாயகர்களுடன் இருவரும் நடித்த படங்களை இன்றும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துள்ளனர். டைரக்டர் கே.வி.ஆனந்த்தின் இயக்கத்தில் "கோ" படத்தில் நாயகன் ஜீவா உடன் ராதாவின் மகள் கார்த்திகா இணைந்து நடித்துள்ளார்.
படம் வெற்றி பெற்றதாக பூரிப்படைந்த ராதா, தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய டைரக்டர் பாரதிராஜாவுக்கு தனது மகள் கார்த்திகா நடித்த "கோ" நடித்த படத்தை அவரின் ரசனைக்கு விருந்தாக வைக்க யோசித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் என் வளர்ச்சிக்கு துணையாக இருந்த டைரக்டர் பாரதிராஜா சார், என் மகளை ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரும் "கோ" படத்தை பார்த்து விட்டு, கார்த்திகா நடிப்பை விமர்சித்தார். மனதார பாராட்டினார். இதனால் நானும் கார்த்திகாவும் உற்சாகமடைந்துள்ளோம் என்று ராதா கூறியுள்ளாராம்