Tuesday, May 17, 2011
ஜூனியர் பாக்யராஜ் சாந்தனு, ராஷ்மி, சந்தானம் ஆகியோர் நடிக்கும் "கண்டேன்" படத்தை டைரக்டர் ஏ.சி. முகில் இயக்கியுள்ளார்.
இவர் பிரபுதேவா, பாண்டியராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
என் அப்பா எடுத்த "கபடி கபடி" படத்திலிருந்து முகிலை எனக்கு தெரியும். பல படங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் "கண்டேன்" படத்தை இயக்கியுள்ளார். திரைக்கதை அமைப்பதிலும் படம் இயக்குவதிலும் தனது அனுபவத்தை நிரூபித்துள்ளார்.
சினிமா கேரியரில் எனக்கு "கண்டேன்" படம் திருப்பு முனையாக அமையும். ரொம்ப சவாலான கதாபாத்திரம். திறமையாக நடித்துள்ளேன். எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்பது காட்சிகளில் தெரியும். இதயத்தை வருடும் பொழுபோக்கு படம் தான் இது.
திரைக்கதைக்காக சந்தானம், நாயகி ராஷ்மி ஆகியோருடன் மிகப்பொருத்தமாக இணைந்து நடித்துள்ளேன். புதுச்சேரி, கும்பகோணம், பிரகதீஸ்வர் கோவில் மற்றும் மலேசியாவின் ஹைடெக் சிட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
விஜய் எபினேசர் இசையில் பாடல்கள் ரசிகர்களை கவரும் என்று "கண்டேன்" பட நாயகன் சாந்தனு சொல்லியிருக்கிறாராம்.